இந்தியன் அபாகஸ் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன.

கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் சார்பில், ஆசிரியர்கள் மற்றும் 30 மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், “அபாகஸ் கணித முறை மூலம் எண்களைக் கணிதத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும். அதோடு, பிரெய்ன் ஸ்கில் என்று சொல்லக்கூடிய மூளைவளர்ச்சி அபாரமானதாக இருக்கும். அபாகஸை முழுமையாகக் கற்றுக்கொண்ட ஒருவரால் எவ்வளவு பெரிய கடினமான கணக்குக்கும், கால்குலேட்டரை விட வேகமாக விடை காணமுடியும். இதனால், மாணவ மாணவியருக்கு மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். கல்வி மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் சிக்கலான நேரங்களிலும் உடனடியாக முடிவெடுக்கக்கூடிய திறன் மிக்கவர்களாக இருப்பர். மேலும், கிராமப்புற மாணவர்கள் அப்துல் கலாமை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டால், அனைவரும் சாதிக்கலாம்” என்றார்.