Press Release அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முசிறி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான இந்தியன் அபாகஸ் அடிப்படையிலான எண்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டி, மற்றும் பரிசளிப்பு விழா

Press Release
அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முசிறி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான இந்தியன் அபாகஸ் அடிப்படையிலான எண்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப் போட்டி, மற்றும் பரிசளிப்பு விழா முசிறி ஐ எம் ஏ மஹால் மஹாலில் 2. 03. 2024 சனிக்கிழமை காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கணித மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி போட்டியை துவக்கி வைப்பதற்காக மதிப்பிற்குரிய திருச்சி மாவட்ட ஆட்சியாளர் திரு. எம். பிரதீப் குமார், ஐ.ஏ.எஸ். அவர்களும் மற்றும் திருமதி. யாஸ்மின் அவர்கள் முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
திருமதி வி. ரேவதி தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முசிறி, அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
பஷீர் அகமது, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், இந்தியன் அபாகஸ் பயிற்சி அடிப்படையிலான எண்கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டுப், போட்டியை துவக்கி வைத்து விழாவின் சிறப்புரை ஆற்றினரர்கள்.
திருமதி. திலகா. அபாகஸ் பயிற்சியாளர். அவர்கள் கடந்த எட்டு மாதங்களாக மாணவ மாணவியர்களுக்கு அபாகஸ் பயிற்சி அளித்ததுடன் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார்கள்.
170 அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாணவர்கள் தங்கள் இருக்கைகளில் வரிசை எண் படி அமர்ந்து, விசில், சத்தம் கேட்டவுடன் வழக்கத்திற்கு மாறாக அதிக வேகத்தில் மேஜிக் ஸ்லைடர்களை அபாகஸில் விரல்களால் நகர்த்தி விடைகளை எழுதினர்கள்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். போட்டி பிற்பகல் ஒரு மணிக்கு முடிவடைந்தது. மற்றும் வெற்றியாளர்களுக்கு வெற்றியாளர்களின் அடிப்படையில் பரிசு வகைப்படுத்தப்பட்டு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது,
இது தவிர சான்றிதழ், மற்றும் Medal வழங்கப்பட்டது, இது ஒரு பிரம்மாண்டமான அபாகஸ் விழாவாக இருந்தது, 70 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட ஏற்பாட்டுக் குழுவால் நடத்தப்பட்டது.
திரு. என். பஷீர் அகமது, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், இந்தியன் அபாகஸ், அவர்கள் பேசும்போது இந்தியன் அபாகஸ் கணித பாடதிட்டம், எண்கணிதத்தின் அடிப்படைக் கணக்கீடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல், பயிற்சி பெறவும் அபாகஸை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, கணித பாட மற்றும் முழு மூலை வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டும், முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான குறிப்பிடத்தக்க வேகம் மற்றும் துல்லியம், கணக்கீட்டு திறன், அதிகரிக்கச் செய்யும்படி பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர்கள் பேசும்போது இந்த பயிற்சி, ஏன், எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும், மற்றும் இது மாணவர்களை கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டில் எவ்வாறு பயன்பெற வைக்கிறது என்பது குறித்தும் பேசினார்கள்.
மேலும், அபாகஸ் அடிப்படையிலான கணிதம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் குறித்துப் பேசினார், அபாகஸ் முறை கற்பிக்கும் போது கூட்டல் மற்றும் கழித்தல் வழக்கமான முறையை விட குழந்தைகளால் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறது. அபாகஸ் கற்றலுடன் தொடர்புடைய குழந்தைகள், வழக்கமான பயிற்சியை விட அபாகஸ் பயிற்சியின் மேன்மை. கருத்தை புரிந்து கொள்வதுடன் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அபாகஸ் கற்றல் 3 முதல் 13 வயது வரை குழந்தைகளுக்கு மிகவும் விழிப்புடன் மற்றும் கூர்மையான மன கணித பாட, மற்றும் முழு மூலை வளர்ச்சி, திறன்களை வழங்கும் ஒரு வலுவான கல்வி அடித்தளத்தை அமைக்கிறது, இது ஒவ்வொரு மாணவர்களையும் கல்வியில் சிறந்து விளங்க உதவுகிறது.
அபாகஸ் என்பது வேகமான மற்றும் துல்லியமான மன எண்கணிதத்தைச் செய்யக் கற்றுக்கொள்வதற்கான ஒரு கருவியாகும், குறிப்பாக இது அவர்களின் மூளைத் திறன்களான கவனிக்கும் தன்மை, காட்சிப்படுத்தல், கேட்கும் திறன், தன்னம்பிக்கை, வேகம் மற்றும் துல்லியம் போன்றவற்றை, வலது மூளையை இயக்குவதன் மூலம் மேம்படுத்த உதவுகிறது. அனைத்து பள்ளி பாடங்களிலும், கணிதம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க, மற்றும் கணித பயத்தை மாணவர்கள் போக்க உதவுகிறது. மேலும், இத்திட்டத்தின் பலன்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் வலியுறுத்தப்பட்டது.
அபாகஸ் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பேசும்போது அபாகஸ் கருவியைப் பயன்படுத்துவதில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்தைத் காட்டினார்கள் என்றும், பிறகு, அனைத்துப் பாடங்களிலும் மாணவ மாணவியர்கள் வருகை மற்றும் கற்றல் முடிவுகள் மேம்பட்டதால் பள்ளிகளும் மகிழ்ச்சியடைந்தன என்றும். குழந்தைகள் அச்சமின்றி எண்களுடன் விளையாடத் தொடங்கினர் என்றும் கூறினார்கள்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் அடிப்படையிலான கணித பயிற்சி அளிப்பதில் சிறந்த பள்ளிக்கான மற்றும் சிறந்த அபாகஸ் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது, தன்னார்வலர்கள் அபாகஸ் ஆசிரியர்களும், மற்றும் தனியார் பயிற்சி நிறுவன உரிமையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
Recent Posts
See Allhttps://youtube.com/watch?v=AuWd3YNqSu8&feature=shared
Comentários