இந்தியன் அபக்கஸ் செங்கோட்டை பகுதி மாணவர்கள் கணிதவியலில் உலக சாதனை! தனுஷ்குமார் எம்பி பாராட்டி பரிசு
இந்தியன் அபக்கஸ் செங்கோட்டை பகுதி மாணவர்கள் கணிதவியலில் உலக சாதனை! தனுஷ்குமார் எம்பிநேரில் சென்று பாராட்டி பரிசு வழங்கினார்.
செங்கோட்டை, ஆக, 26. செங்கோட்டையை அடுத்துள்ள வல்லத்தில் ஸ்மார்ட் சாய்ஸ் எனும் நிறுவனம் மாணவ, மாணவியா்களுக்கு இந்தியன் அபக்கஸ் கணிதவியல் பாடத்திற்கு சிறப்பு பயிற்சியளித்து வருகிறது. மேலும்இந்த இந்தியன் அபக்கஸ் கணிதவில் பயிலும் மாணவரக்ளுக்காக கடந்த 08.08.2021 அன்று இந்தியன்அபக்கஸ், எலைட் மற்றும் இந்தியன் ரெக்காட்ஸ் அகாடமி சார்பில் மனக்கனித எண் கணக்கிடுதல் நிகழ்ச்சி இணையவழி வீடியோ காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ளசுமார் 50000க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவரும் நிலையில் தென்காசி பகுதியில் உள்ள மாணவர்கள் 5ஆம்வகுப்பு பயின்றுவரும் ஜெனோவின், 6ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜெரின், 4ஆம் வகுப்பு பயின்றுவரும்ஜெயபால்சாலோம், 7ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி டியாஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டு எலைட்உலக சாதனை புரிந்தனா் இது குறித்து தகவல் அறிந்த தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா்தனுஷ்குமார் சாதனைபுரிந்த மாணவர்களை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி பரிசுகள்வழங்கினார். நிகழ்ச்சியில் பொறியாளா் சின்னத்துரை, ஸ்மார்ட் சாய்ஸ் நிறுவனா் ராஜா, ஆசிரியா் இராஜராம், ஆசிரியா் சிலுவை மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனா்.
Comments